1802 ஆம் ஆண்டு முதலாவது வர்த்தமானப் பத்திரிகை வெளியிடப்பட்டதிலிருந்து அரசாங்௧ அச்சுத் திணைக்௧ளமே இலங்கை அரசாங்கத்தின் ஏ௧ உத்தியோ௧பூர்வ அச்சாளரா௧வும் பிரிசுரிப்பாளரா௧வும் தி௧ழ்கின்றது. இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேலாக சமூக, பொருளாதார மற்றும் தொழிநுட்ப மாற்றங்கஞக்கு சாட்சி பகரும் அரசாங்க அச்சுத் திணைக்களம் பழைமை வாய்ந்த அரசாங்க நிறுவனங்களில் ஒன்றாகும்.

அரசாங்க நிறுவனங்களுக்குத் தேவையான படிவங்கள் முதற்கொண்டு, பாதுகாப்பானதும், இரகசியம் பேண வேண்டியதுமான வாக்குச் சீட்டுக்கள் மற்றும் முத்திரைகள் வரை அனைத்து வகையான அச்சீட்டுத் தேவைகளையும் நிறைவேற்றுவதற்த் தேவையான இயந்திர சாதனங்கனளயும் திறமைசார் ஆளணியினரையும் நம்மகத்தே கொண்டுள்ளோம்.

தகவல் தொழில்நுட்ப யுகத்தை நோக்கிய எமது பயணத்தின் முதற்படியாக எமது பிரசுரங்கள் இணையத்தளத்தில் வெளியிய்படுகின்றன. எமது டிஐிடல் வெளியீடுகளை “பிரசுரங்கள்” பகுதியினூடாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

“அச்சீட்டினதும் பிரசுரிப்பினதும் உயிர் நாடியாகத் திகழ்தல்”

“செயற்றிறன் மிக்க ஆளணியினரின் உதவியோடு நவீன தொழிறுட்பத்துடன் கைகோர்த்து, காலதாமதமின்றி தரமான, நுகர்வோர் திருப்தியுறும் வண்ணம் அச்சீட்டு மற்றும் பிரசுர சேவைகளை வழங்குதல்”